muslim attaweerawewa
புதிய முஸ்லீம் அட்டவீரவெவ நலன்புரி சங்கம்
புதிய முஸ்லீம் அட்டவீரவெவ பிரதேசத்தில் ஊரை, பள்ளிவாசல்களை, மெளலவி மார்களின் சங்கங்களை, விளையாட்டு கழகங்களை மற்றும் பாடசாலையை மையமாகக்கொண்டு பல நலன்புரி சங்கங்கள் இயங்குகின்றன.
இருந்தாலும் இந்த சங்கங்கள் அனைத்தையும் இணைத்து ஒரே கூரையின் கீழ் கொண்டுவந்து அதன் மூலமாக அட்டவீரவெவ பிரதேசத்திற்கு முழுமையான பயனடையும் வகையில் பல வேலைத்திட்டங்களை குறிக்கோளுடன் செயற்படுத்த ஆலோசனை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது
புதிய முஸ்லீம் அட்டவீரவெவ நலன்புரி சங்கம் 2013 ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.
இதன் தலைவரோடு இணைந்து 16 சகோதரர்கள் இச்சங்கத்தில் உறுப்பினராக செயற்படுகின்றனர்.
இச்சங்கம் முதிய முஸ்லீம் அட்டவீரவெவ குத்துபுன் நூரிய்யா ஜூம்மா மஸ்ஜித் "மதரசா" கட்டிடத்தை தலைமையகமாக கொண்டு இயங்குகின்றது.
2019 வேலைத்திட்டங்கள்
* இந்த நலன்புரி சங்கத்தின் முதல்கட்ட வேலைத்திட்டம். இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படுகின்ற பிரதேசங்களுக்கு உதவுவதற்காக ஊரில் நிதி சேகரிப்பு செய்தல் மற்றும் உலர் உணவுப் பொருட்களும் சேகரிக்கப்பட்டு வழங்குதல்..
* ஆபத்தான நிலையில் இருக்கும் வசதி குறைந்த நோயாளிகளுக்கு ஊர் மற்றும் ஊரை அண்மிய கிராமங்களில் நிதி மற்றும் நெல்தானியங்களை சேகரித்து வழங்குதல்.
* தந்தையை இழந்த ஏழைக் குமரிப் பெண்களின் திருமணங்களுக்கு ஊரில் நிதி சேகரித்து வழங்குதல்.
* ஜனாஸா நலன்புரி சங்கம் மூலமாக ஒவ்வொரு ஜனாஸா வீடுகளுக்கும் உதவித்தொகையொன்று தொடர்ச்சியாக வழங்கப்படுதல்.
* நலன்புரி சங்கத்துக்கு சொந்தமான ஹட் இனை ஜனாஸா வீடுகளுக்கு இலவசமாக வழங்குவதோடு ஊரின் பிற பொது நிகழ்வுகளுக்கும் அது பயன்படுத்தப்படுகின்றது.
* நலன்புரி சங்கத்திற்கு சொந்தமான புல் வெட்டும் இயந்திரங்கள் ஊரின் பொது வேலைத்திட்டங்களின் போது பயன்படுத்தப்படுகின்றன.
*டெங்கு போன்ற நோய்கள் பரவுவதை தடுப்பதற்காக ஊரை மையமாகக்கொண்டு மாபெரும் சிரமதானங்கள் இவ்வருடம் நடாத்தப்பட்ட தோடு அதன்மூலம் ஊர் மற்றும் பள்ளிவாயல் வளாகம் பாரியளவில் சுத்தம் செய்யப்பட்டது.

Comments
Post a Comment