muslim attaweerawewa
முஸ்லீம் அட்டவீரவெவ முஸ்லீம் வித்தியாலயம்
முற்றிலும் விவசாய பூமியான முஸ்லீம் அட்டவீரவெவ ஏனைய முஸ்லீம் ஊர்களை விடவும் தனித்தே காணப்படுகிறது. சுற்றிலும் சிங்கள ஊர்களைக் கொண்ட முஸ்லீம் அட்டவீரவெவ மக்களின் குழந்தைகள் கல்வியை கற்பதில் போக்கு வரத்து சிரமத்தை கவனத்தில் கொண்டு இவ்வூர் மக்களின் குழந்தைகளும் உயர் கல்வி பயில வேண்டும். வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் அன்றய ஊர் தலைவர்கள்,பெரியவர்கள், ஊர் மக்கள் அனைவரும் ஒன்றினைந்து பாடசாலை ஒன்றின் அவசியத்தினை அரசாங்கத்துக்கு முன்னைத்தனர். அவர்களின் வேண்டுகோளை செவிசாய்த்த அன்றய அரசாங்கத்தினால் கடந்த 1956இல் முஸ்லீம் அட்டவீரவெவ முஸ்லீம் வித்தியாலயம் துவங்கப்பட்டது. இப்பாடசாலையில் முஸ்லீம் அட்டவீரவெவ பழய ஊர்,மற்றும் புதிய ஊர் மாணவர்களும் கல்வி பயில்கின்றனர்.
தினமும் பாடசாலை துவங்கியவுடன் வளாகத்தில் உடற்கல்வி ஆசிரியர்களால் கூட்டுப்பயிற்சி நடத்தப்படுகிறது. அதன் பின், தேசிய கீதம். மற்றும் பாடசாலை கீதம் போன்றன பாடப்பட்டு மத நல்லிணக்கம், சமயவழிபாடு அதிபர் உரை, ஆசிரியர் உரை, மாணவர் உரை போன்றனவும் காலைக் கூட்டத்தில் இடம் பெறுகின்றன.
நுாலகம்
பள்ளி மாணவர்கள் கல்வியோடு, பொது அறிவும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பாடசாலையில் நுாலகம் அமைப்பதற்கு பாடசாலை நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது.
நூலகம் ஒன்றை நிறுவுதன் மூலம் மாணவர்களின் பொது அறிவுத்திறன் மேம்படும் என்பதில் ஐயமில்லை
உணவுத்திட்டம்
ஒன்று முதல் ஒன்பது வரையான மாணவர்கள் படிக்கும் இந்தப்பாடசாலையில் ஒன்று முதல் நான்கு வரை படிக்கும் மாணவர்களுக்கு உணவுத் திட்டத்தின் கீழ் உணவுகள் வழங்கப் படுகின்றன.
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு செயல்முறைப் பாடமும் கற்பிக்கின்றனர். இதனால், மாணவர்களுக்கும் பாடம் எளிதில் புரிவதோடு, ஆர்வத்துடன் கல்விகற்கின்றனர். மாணவர்களை உற்சாகமூட்டும் வகையில், கதை, கட்டுரை, நடனப்போட்டிகள் போன்றனவும் நடாத்தப்படுகிறது.
கணனிக் கல்வி
மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாது, பிற துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதால், பாடசாலையில் கணனி கல்வியும் போதிக்கப்படுகிறது. இது தவிர, அறிவியல் கண்காட்சி, ஓவியம் வரைதல், விளையாட்டுப் போட்டிகளும் பாடசாலையில் நடாத்தப்படுகிறது. பல்வேறு போட்டிகளிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளனர்.
உடற் பயிற்சி
மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் பாடசாலை மைதானத்தில் தினமும் உடற் பயிற்சியும் நடத்தப்படுகிறது.
இது தவிர பாடசாலையை சுற்றிலும் மரக்கன்றுகளும், பூச்செடிகளும் அதிக அளவில் நடப்பட்டு, அதை பராமரிக்கும் பணியையும், மாணவர்களே மேற்கொண்டுள்ளனர்.
இந்தப் பாடசாலையில் படித்த மாணவர்கள் உயர் படிப்பிற்காக வெளி மாவட்டங்களில் கல்வி கற்பது மட்டுமன்றி பல மாணவர்கள் சாதரண தரத்திலும் உயர்தரத்திலும் சிறந்த பெறுபேறுகள் பெற்று பல்கலைக் கழகங்களிலும் கல்வி பயிலுகின்றனர்.
அது மட்டுமன்றி
இந்தப்பாடசாலையில் படித்தவர்கள் உயர்கல்வி கற்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் பதவியில் பணியாற்றுகின்றனர்.
தான் பட்ட கஷ்டத்தை தனது குழந்தைகளும் படக்கூடாது என்பதற்காக கஷ்டப்பட்டு தமது குழந்தைகளை பல லட்சங்கள் செலவளித்து படிக்க வைக்கும் தந்தையர்களுக்கு வாழ்த்துக்கள்
தனது தந்தையரின் கனவுகளை நனவாக்கும் முயற்சியில் கல்வி கற்கும் மாணவச் செல்வங்களுக்கும் வாழ்த்துக்கள்.









Comments
Post a Comment